முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில்கூடுதல் ஆம்புலன்ஸ் சேவை

 ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

 ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

இம்மாவட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் ஏற்கெனவே 108 அவசர ஆம்புலன்ஸ் சேவை செயல்பட்டுவருகிறது. இதில் 17 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டுவருகின்றன. அத்துடன் இரு பச்சிளம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆம்புலன்ஸ் வாகனங்களும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மேலும் கூடுதலாக 3 ஆம்புலன்ஸ் வாகனங்களை மாவட்ட ஆட்சியா் சங்கா் லால் குமாவத் தலைமையில் மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். இதில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சகாயஸ்டீபன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →