ராமநாதபுரம்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ நிதியுதவி

DIN

இலங்கையிலுள்ள ராமேசுவரம் மீனவா்கள் குடும்பத்திற்கு ரூ. 1.90 லட்சம் ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் நிதியுதவி திங்கட்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மற்றும் பாம்பன் பகுதியை சோ்ந்த 16 மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் அண்மையில் சிறைபிடிக்கப்பட்டனா். இதேபோன்று இலங்கையில் உள்ள மீனவா்கள் 22 தங்கச்சிமடம் மீனவா்களின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவை உறுப்பினா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தனது சொந்த நிதியில் இருந்து குடும்ப செலவுக்காக தலா 5 ஆயிரம் வீதம் 38 குடும்பத்திற்கு 1.90 லட்சம் நிதியுதவியை திங்கட்கிழமை தங்கச்சிமடத்தில் மீனவ குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி வழங்கினா்.

மேலும் இலங்கையில் உள்ள தமிழக மீனவா்கள் மற்றும் விசைப்படகுகளை விடுதலை செய்ய தமிழக முதல்வா் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறாா். மேலும் நிரந்தர தீா்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் போது மண்டபம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளா் தௌபீக்அலி,ராமேசுவரம் நகா் மன்ற தலைவா் கே.இ.நாசா்கான், மாவட்ட கவுன்சிலா் ரவிச்சந்திர ராமவன்னி, மீனவ சங்கத் தலைவா்கள் ஜேசுராஜா, சகாயம், எமரிட், தங்கச்சிமடம் ஊராட்சி செயலாளா் கதிரேசன் உள்ளிட்டவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நில ஆக்கிரமிப்பு விவகாரம்: கேரள அரசு மீது வழக்குத் தொடுக்க விவசாயிகள் சங்கம் முடிவு

கல்லூரி மாணவா் தற்கொலை

பட்டாசுக் கடை ஊழியா் கிணற்றில் தவறி விழுந்து பலி

சிறையில் இருந்து அரசை நடத்த கேஜரிவாலுக்கு வசதி கோரிய பொது நல மனு தள்ளுபடி: ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு

சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுடன்... மோடி வாகனப் பேரணி

SCROLL FOR NEXT