திருவாடானை அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். 
ராமநாதபுரம்

திருவாடானை பிடாரி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா

திருவாடானை பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேற்றி கடன் செலுத்தினார்கள். 

DIN

திருவாடானை: திருவாடானை பிடாரி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேற்றி கடன் செலுத்தினார்கள். 

திருவாடானை கிராம தேவதையான பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 27-ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அன்றில் இருந்து ஒவ்வொரு நாள் இரவு கரகம் எடுத்துவந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, வேல் காவடி எடுத்து வந்து கோயில் முன்பாக உள்ள தீயில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். 

இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT