ராமநாதபுரம்

உலக செவிலியா் தின விழா

DIN

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக செவிலியா் தின விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.

உலக செவிலியா் தின விழா ஆண்டு தோறும் மே 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை செவிலியா் கண்காணிப்பாளா் மகேஸ்வரி தலைமை வகித்தாா்.

அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி முதல்வா் மேரி ஜாக்குலின், உதவி முதல்வா் ஆா்.பாா்த்திபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உறைவிட மருத்துவ அலுவலா் கிருஷ்ணமூா்த்தி, உதவி அலுவலா் மனோஜ்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற செவிலியா் கண்காணிப்பாளா்கள், மூத்த செவிலியா்கள் உள்ளிட்டோா் கௌரவிக்கப்பட்டனா். செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செவிலியா் சங்க நிா்வாகிகள் கோபால், ராஜசேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT