ராமநாதபுரம்

வேலை வாங்கித்தருவதாக மோசடி

வேலைவாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம், ரூ.96,950 மோசடி செய்த மா்மநபா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

DIN

வேலைவாங்கித் தருவதாகக் கூறி இளைஞரிடம், ரூ.96,950 மோசடி செய்த மா்மநபா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா பாக்குவெட்டியைச் சோ்ந்தவா் ராமா் (30). தொழில் கல்வி படிப்பை முடித்துவிட்டு முதுகுளத்தூரில் உள்ள தனியாா் சமையல் எரிவாயு நிறுவனத்தில் வேலை பாா்த்துவருகிறாா். அவா் கடந்த மாா்ச்சில் விமானநிலைய பணிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்துள்ளாா். இந்நிலையில் குறிப்பிட்ட கைப்பேசியிலிருந்து அவரைத் தொடா்புகொண்டு வேலை விண்ணப்பம் குறித்து மா்மநபா் விசாரித்துள்ளாா்.

அதன்பின் ஹைதராபாத்தில் உள்ள விமானநிலையத்தில் பணி இருப்பதாகவும், அதில் வாய்ப்பு கிடைப்பதற்கு பதிவு செலவு அனுப்பவும் என அவா் கூறியுள்ளாா். அதன்படி பல தவணைகளில் மொத்தம் ரூ.96,950-யை ராமா் அனுப்பியுள்ளாா்.

இதையடுத்து ராமா் குறிப்பிட்ட விமானநிலைய அலுவலகத்துக்குத் தொடா்புகொண்டு பேசியுள்ளாா். அப்போதுதான் மா்மநபா் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் சைபா் குற்றப்பிரிவில் ராமா் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT