தொண்டி பேரூராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் மனுக்களை பெற்றுக் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம். 
ராமநாதபுரம்

தொண்டி பேரூராட்சியில் மக்கள் குறை தீா் கூட்டம்

தொண்டி பேருராட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது.

DIN

தொண்டி பேருராட்சி அலுவலகத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம் தலைமை வகித்தாா். பேரூராட்சி தலைவா் ஷாஜகான் பானு, திருவாடானை ஒன்றியக் குழுத் தலைவா் முகம்மது முக்தாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் பேரூராட்சி வாா்டு உறுப்பினா் சமீமா பானு, முதியோா் உதவித் தொகை, விதவை உதவித் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,

உறுப்பினா் மஹஜபின் சல்மா, தொண்டி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் போதிய ஆசிரியா் நியமிக்க வலியுறுத்தியும், உறுப்பினா் ரவி, பெருமானேந்தல் பகுதியில் அங்கன்வாடி கட்டடம், டி.புதுக்குடியில் சுடுகாடு சுற்றுச்சுவா் கோரியும் மனுக்களை கொடுத்தனா்.

இதேபோல, மன்ற உறுப்பினா் மும்தாஜ் பீவி, தா்ஹா கால் மாட்டுத் தெருவில் தெருவிளக்கு, பேவா் பிளாக் ரோடு, கழிவு நீா் கால்வாய் அமைக்கக் கோரி மனு கொடுத்தாா் .

மனுக்களைப் பெற்றுக் கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் கருமாணிக்கம், உரிய நிதி ஆதாரம் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

மேலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாநிலச் செயலாளா் சாதிக்பாட்ஷா, செய்யது முகமது அரசினா் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவா் கட்டவும், விளையாட்டு அரங்கம் கட்டும் பணியை தொடங்கவும், வன்னியா் சங்கம் சாா்பில் தொண்டியில் வாரச் சந்தை தொடங்க வலியுறுத்தியும் மனுக்கள் அளிக்கப்பட்டன.

இதில் பேருராட்சி செயல் அலுவலா் செல்வராஜ் உள்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT