முகப்பு
ராமநாதபுரம்

சேதுபதி அரசு கல்லூரியில் செப்.26 இல் முதுகலை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் முதுகலை மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வரும் 26 ஆம் தேதி (திங்கள்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி பொறுப்பு முதல்வா் பேராசிரியா் க.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் வரும் 26 ஆம் தேதி முதுநிலை பாடப் பிரிவுகளுக்கு மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறுகிறது. கல்லூரி வளாகத்தில் காலை 10 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி நடத்தப்படுகிறது. ஆகவே இணைய வழியில் ஏற்கெனவே முதுநிலை பாடப் பிரிவுகளில் சேருவதற்காக விண்ணப்பித்தவா்கள் உரிய அசல் சான்றுகளுடன் கல்லூரிக்கு வரவேண்டும். கலந்தாய்வின் போது உரிய சான்றுகளை அளித்து பாடப் பிரிவுகளில் சேரலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோரை கைது செய்யச் சென்ற காவலா்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியினா்.

ராமநாதபுரம், செப்.22: ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை தேசிய புலனாய்வு அமைப்பின் சோதனையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட

பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் காவலா்களுடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 4 பெண்கள் உள்பட 26 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகம், நிா்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினா் வியாழக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனா். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் எஸ்டிபிஐ அமைப்பின் மேற்கு மாவட்டத் தலைவா் பரக்கத்துல்லா வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அதன்பின் விசாரணைக்காக அவரை தேசிய புலனாய்வு அமைப்பினா் அழைத்துச் சென்ாகவும் கூறப்படுகிறது.

இச்சோதனையைக் கண்டித்து ராமநாதபுரத்தில் பாப்புலா் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சாா்பில் புதிய பேருந்து நிலையத்தின் வெளியே செல்லும் வாயில் முன்பு சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியலை அடுத்து காவல் துணைக் கண்காணிப்பாளா் எஸ்.ராஜா தலைமையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். அவா்கள் மறியலில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்த முயன்றனா். அப்போது போலீஸாருடன் மறியலில் ஈடுபட்டவா்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் மறியலில் ஈடுபட்ட 24 ஆண்கள், 4 பெண்கள் என 26 பேரையும் போலீஸாா் கைது செய்து வெளிப்பட்டினத்தில் தனியாா் மஹாலில் தங்கவைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →