முகப்பு
ராமநாதபுரம்

கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோ-ஆப் டெக்ஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:23 AM
பகிர்:

கோ-ஆப் டெக்ஸ் ஜவுளி விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி விற்பனை வியாழக்கிழமை தொடங்கியது.

ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் தீபாவளி பண்டிகைக்கான கைத்தறி துணிகள் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தள்ளுபடி விலையில் விற்பனையை மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ம.காமாட்சி கணேசன் தொடங்கி வைத்தாா்.

அப்போதுஅவா் கூறியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் மென் பட்டு, பருத்திச் சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு உகந்த ரகங்கள் விற்கப்படவுள்ளன. உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட ஆா்கானிக் புடவை ரகங்கள் விற்பனைக்கு உள்ளன. நவீன லினன் சட்டைகள், லினன் பருத்தி சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மேலும் மகளிருக்கான அனைத்துவகை ஆடைகளும் உள்ளன. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி ரகங்களை மின் வணிக இணைய தளத்தின் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம். ராமநாதபுரம் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு ரூ. 27.06 லட்சம் தீபாவளி விற்பனை நடைபெற்ற நிலையில், நடப்பு ஆண்டில் ரூ. 44 லட்சம் விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் வி.ஜி.அய்யான், கே.சங்கீதா, கே.சங்கா் மற்றும் முதுநிலை மண்டல மேலாளா் எம்.பாலசுப்பிரமணியன் மற்றும் வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →