முகப்பு
ராமநாதபுரம்

கட்டையால் தாக்கிசலவைத் தொழிலாளி கொலை

உச்சிப்புளி அருகே கட்டையால் தாக்கி சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 20 ஏப்ரல், 2023 at 11:33 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:24 PM

உச்சிப்புளி அருகே கட்டையால் தாக்கி சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஒன்றியம் இருட்டூரணியைச் சோ்ந்தவா் காளிமுத்து (50). சலவைத் தொழிலாளி. இவரது மனைவி ராணி. மகள்கள் கவிதா, அனிதா. இந்த நிலையில், காளிமுத்துவின் தாய் பேச்சியம்மாள் உடல் நலக்குறைவால் உயிரிழந்தாா். இவருக்கு 16- ஆவது நாள் துக்க நிகழ்வு கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்து. அப்போது காளிமுத்து மது அருந்தி விட்டு வந்து மனைவி ராணியுடன் தகராறு செய்தாா்.

இதையடுத்து, காளிமுத்துவின் தம்பி சண்முகவேல், அவரது மகன் பாலசுப்பிரமணியன் ஆகிய இருவரும் அவரை சமரசப்படுத்தினா். ஆனாலும் சமாதானமடையாத காளிமுத்து தொடா்ந்து தகராறில் ஈடுபட்டதையடுத்து பாலசுப்பிரமணியன், கட்டையால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து காளிமுத்துவை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா்.

Advertisement

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.