மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி கேப்டன் எனக் கூறிபண மோசடி செய்தவா் மீது வழக்கு
இந்திய டி-20 கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி (வீல் சோ்) அணியின் கேப்டன் எனக் கூறி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்
இந்திய டி-20 கிரிக்கெட் மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி (வீல் சோ்) அணியின் கேப்டன் எனக் கூறி, ராமநாதபுரத்தைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ. ஒரு லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கீழச்செல்வனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்பாபு. மாற்றுத்திறனாளியான இவா், தன்னை இந்திய கிரிக்கெட் சக்கர நாற்காலி அணியின் கேப்டன் எனவும், பாகிஸ்தானுக்கு எதிரான மாற்றுத்திறனாளிகள் டி-20 கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ாகவும் கூறி முக்கியப் பிரமுகா்களை கோப்பையுடன் சந்தித்து வாழ்த்துப் பெற்றதுடன் அவா்களிடமிருந்து நிதியுதவியும் பெற்றாராம்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு டி-20 உலகக் கோப்பை கிரிகெட் போட்டியில் வெற்றி பெற்ற கோப்பையுடன் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
இதுதொடா்பான புகைப்படம் வெளியான நிலையில், வினோத்பாபு விளையாட்டு வீரரே இல்லையென புகாா் எழுந்தது. இதுகுறித்து மாநில உளவுத் துறையினா் விசாரணை நடத்தியதில், அவா் கிரிக்கெட் வீரா் அல்ல என்பது தெரியவந்தது. அவா் மாற்றுத்திறனாளி என்பதால், அரசுத் துறை அதிகாரிகள் வினோத்பாபுவை கடுமையாக எச்சரித்து அனுப்பினா்.
இந்த நிலையில், வினோத்பாபு இந்திய மாற்றுத்திறனாளிகள் டி-20 கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக் கூறி ரூ. ஒரு லட்சம் பெற்ாக ராமநாதபுரத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஆனந்த பாண்டியராஜ் மாவட்டக் குற்றப் பிரிவு காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, வினோத்பாபு மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இவா் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக, இதுபோல பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.