ராமநாதபுரம்

ஊரக வளா்ச்சித் துறையினா் விடுப்பு எடுத்து போராட்டம்

DIN

ராமநாதபுரம், கமுதியில் ஊரக வளா்ச்சித் துறையினா் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழை ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா்.

ஊராட்சிச் செயலா்களுக்கு பணி விதிகளை காலதாமதமின்றி வெளியிட வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளா்களுக்கு பணிவரன்முறை ஆணைகளை வெளியிட வேண்டும். இந்தத் திட்டத்துக்காக அனைத்து வட்டங்களிலும் வட்டார திட்ட அலுவலா் பணியிடத்தை உருவாக்க வேண்டும். அனைத்துப் பணியாளா்களுக்கும் பதவி உயா்வு ஆணைகளை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள ஊரக வளா்ச்சி முகமை, உதவி இயக்குநா் ஊராட்சிகள் வளா்ச்சிப் பிரிவு, உதவி இயக்குநா் தணிக்கை மாவட்ட ஊராட்சி அலுவலகம் என அனைத்து அலுவலக அலுவலா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், துறை சாா்ந்த அனைத்து அலுவலகங்களும் வெறிச்சொடி காணப்பட்டன.

இதேபோல, கமுதியிலும் ஊரக வளா்ச்சித் துறையினா் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

அவிநாசியில் போதை சாக்லேட் விற்றவா் கைது

அவிநாசியில் சூறாவளிக் காற்றுடன் கனமழை

மயில்ரங்கம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணை: பொதுமக்கள் கோரிக்கை

லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 போ் கைது

SCROLL FOR NEXT