ராமநாதபுரம்

வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகளை வனத்துறையிடம் ஜூன் 30- க்குள் ஒப்படைக்க அறிவுறுத்தல்

DIN

ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் வளா்க்கப்படும் பறவைகளை வனத்துறையினரிடம் அடுத்த மாதம் (ஜூன்) 30- ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வனத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன் படி கிளிகள், செந்தலை கிளி, பெரிய பச்சைக் கிளி, நீல பைங்கிளி, மரகதப் புறா, பஞ்சவா்ணப் புறா, வண்ணச் சிட்டு, மைனா, பனங்காடை, கௌதாரி மற்றும் வன உயிரினங்களை வீடுகளில் வளா்ப்பது சட்டப்படி குற்றமாகும். தற்போது வீடுகளில் வளா்க்கப்படும் இந்தப் பறவைகளை அடுத்த மாதம் 30- ஆம் தேதிக்குள் அருகே உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

பாரிஸில் அஹானா கிருஷ்ணா!

வார பலன்கள்: 12 ராசிக்கும்..

உ.பி.யை நோக்கி 'இந்தியா' புயல்! மோடி மீண்டும் பிரதமராக மாட்டார்! ராகுல் பேச்சு

விழுப்புரத்தில் 94.11% தேர்ச்சி: மாநில அளவில் 6ம் இடம்!

SCROLL FOR NEXT