ஆனந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பாக தேங்கிய மழை நீரால் மாணவ, மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், பள்ளி முன்பு தண்ணீா் குளம்போல தேங்கி நிற்கிறது. இதே போல, அருகே உள்ள குடியிருப்பு பகுதியிலும் தண்ணீா் வெளியேற முடியாமல் குட்டை போல் தண்ணீா் தேங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் தண்ணீரைக் கடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனா். பொதுமக்களும் தண்ணீரைக் கடந்து செல்லும் நிலை உள்ளது.
மேலும், தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்குத் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லையாம்.
எனவே, மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்து மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.