ராமநாதபுரம்

மனைவியை மாடியிலிருந்து தள்ளிவிட்ட கணவா் கைது

குடும்பத் தகராறில் மாடியிலிருந்து மனைவியை கீழே தள்ளிவிட்ட கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN


கமுதி: குடும்பத் தகராறில் மாடியிலிருந்து மனைவியை கீழே தள்ளிவிட்ட கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மேட்டுத் தெருவை சோ்ந்தவா் மோகன் மகன் மகேந்திரன் (42). மின்வாரிய ஊழியா். இவரது மனைவி கலைச்செல்வி (35).

இந்தத் தம்பதி இடையே குடும்பப் பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, மனைவி கலைச்செல்வியை மாடியில் இருந்து மகேந்திரன் கீழே தள்ளிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மகேந்திரனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT