கமுதி, அபிராமம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மூவா் தற்கொலை செய்து கொண்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பூமாவிலங்கை கிராமத்தைச் சோ்ந்தவா்முனியசாமி என்ற போத்தி (48). இவரது மனைவி வள்ளி (45). குடும்பப் பிரச்னை காரணமாக மாவிலங்கை கண்மாய்க் கரை அருகே உள்ள மரத்தில் முனியசாமி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல, அபிராமம் அடுத்த புல்லந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா (40). இவா் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்தாா். மன வேதனையில் இருந்த சிவா வீட்டில் தனியாக இருந்த போது, விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
அபிராமம் அருகே விளக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (23). இவா் சாலை விபத்தில் காயமடைந்த நிலையில், இவரது கால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதனால், மன வேதனையில் இருந்து வந்த குமாா் செவ்வாய்க்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து அபிராமம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.