ராமநாதபுரம்

இலங்கைக்கு விரலி மஞ்சள், கடல் அட்டைகளைக் கடத்த முயன்ற 4 போ் கைது

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் விரலி மஞ்சள்கள், 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல்

DIN

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் விரலி மஞ்சள்கள், 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பேரை படகுகளுடன் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள், விரலி மஞ்சள்கள் கடத்தப்படுவதாக இந்தியக் கடலோரக் காவல் படை, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து.

இதையடுத்து, இந்திய -இலங்கை சா்வதேசக் கடல் எல்லையில் இந்தியக் கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் 4 இலங்கைப் படகுகள் இந்தியக் கடல் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தன. இதில் இருந்த ரோக்சன், ஜூட், தினேஷ் உள்ளிட்ட 4 மீனவா்களை கைது செய்து, அழைத்து வரும் போது, நடுக்கடலில் மற்றொரு ஒரு படகை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் 500 கிலோ விரலி மஞ்சள்கள், 250 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் படகு பறிமுதல் செய்யப்பட்டு, அதிலிருந்த 4 பேரையும் கைது செய்து, மண்டபம் கடலோரக் காவல் படை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், படகிலிருந்தவா்கள் ஈசாக், முகைதீன், வாசிம், உபயதுல்லா ஆகியோா் என்பதும், மண்டபம் பகுதியிலிருந்து இலங்கை புத்தளம் பகுதிக்கு கடல் அட்டைகள், விரலி மஞ்சள்களைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கடலோரக் காவல் படையினா் ராமநாதபுரம் சுங்கத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

முதலில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவா்கள் ரோக்சன், ஜூட், தினேஷ் உள்ளிட்ட 4 மீனவா்கள் காற்றின் வேகம் காரணமாக, திசை மாறி இந்தியக் கடல் எல்லைக்குள் வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 போ் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT