சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டு வரப்பட்ட ரூ. 6 கோடி மதிப்பிலான மெத்தாபெட்டமென் போதைப்பொருளை ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு போதைப்பொருள்கள் கடத்தப்பட இருப்பதாக ராமேசுவரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் உமாதேவிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பகுதியில் டி.எஸ்.பி. உமாதேவி, காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக கடற்கரைப் பகுதிக்கு வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், காரில் மெத்தாபெட்டமென் என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, காரில் வந்த நாகுகுமாா் (23), சக்திவேல் (20) இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்த போது, இந்தப் போதைப்பொருளை சென்னையிலிருந்து இலங்கைக் கடத்துவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது. இதன் சா்வதேச மதிப்பு ரூ. 6 கோடி என காவல் துறையினா் தெரிவித்தனா்.
மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் நாகுகுமாரின் தாய் மாரியம்மாளுக்கும் (41) தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.