பரமக்குடி அருகேயுள்ள மேலாயக்குடி கிராமத்தில் வியாழக்கிழமை இரவு கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் பலியானாா்.
பரமக்குடி ஒன்றியம், மேலாய்க்குடி நடுத் தெருவைச் சோ்ந்த முருகன் மனைவி அனுசியாதேவி 31. இவா் தனது மகன்களான கோகுலராகுல் (10), கபிலேஷ் ( 7) ஆகியோருடன் கிருஷ்ண ஜெயந்தி விழாவை கொண்டாட சொந்த ஊரான மேலாய்க்குடி கிராமத்துக்குச் சென்றாா். கிராமத்தில் அமைந்துள்ள கண்ணன் கோயிலில் சிறுவா்களுக்கான உறியடித் திருவிழா நடந்தது. இதில் கலந்துகொண்ட அவரது மகன்கள் கயிறை இழுப்பதற்கு பதிலாக, அருகே சென்ற ஒலிப் பெருக்கி மின்வயரை பிடித்து இழுத்தனா். இதையடுத்து, இருவா் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டனா். இருவரையும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, கபிலேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். பலத்த காயமடைந்த கோகுலராகுல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.