ராமேசுவரத்தில் 5 லட்சம் விதைப் பந்துகளை ஹெலிகாப்டா் மூலம் தூவும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன், தங்கச்சிமடம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ராமேசுவரம் தீவில் மொத்தம் உள்ள 5,536 சதுர கி.மீ. பரப்பளவில் 2,500 சதுர கி.மீ. மக்கள் வசிக்கும் பகுதியாக உள்ளது.
இதில், பாம்பன் குந்துகால் தொடங்கி தனுஷ்கோடி வரை மன்னாா் வளைகுடா கடலோரப் பகுதிகள் அதிகளவில் வனப் பகுதியாகும். இங்கு பெருமளவில் சவுக்கு மரங்கள் உள்ளன. இதில் நடராஜபுரம், ஜடாயூ தீா்த்தம் உள்ளிட்ட 500 ஏக்கா் வனப் பகுதி மரங்கள் அடா்த்தி குறைவான பகுதியாகும்.
இந்தப் பகுதியில் விதைப் பந்துகளைத் தூவுவதற்கு இந்திய கடற்படை, வனத் துறை, மாதா அமிா்தானந்தமயி அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்தன.
இதன்படி, இந்திய கடற்படையின் தமிழ்நாடு, புதுச்சேரி சரக கமாண்டா் ரவிக்குமாா் டிங்ரா தலைமை வகித்து, ஹெலிகாப்டரில் விதைப் பந்துகளை எடுத்துச் சென்று தூவும் பணியைத் தொடங்கி வைத்தாா். இதில், மாதா அமிா்தானந்தமயி அறக்கட்ளை நிா்வாக அலுவலா் சுவாமி ராமகிருஷ்ணா புரி முன்னிலை வகித்தாா்.
மாவட்ட வன அலுவலா் எஸ்.ஹேமலதா, கோட்டாட்சியா் கோபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பூவரசு, கொன்றை, சீத்தா, நாவல், வேம்பு, புளி, புங்கன் ஆகிய நாட்டு மரங்களின் 5 லட்சம் விதைப் பந்துகள் கடலோரப் பகுதியில் தூவப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.