கீழக்கரை, ஏா்வாடியில் பயணிகள் நிழல் குடை திறப்பு
கீழக்கரை, ஏா்வாடி ஆகிய பகுதிகளில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழக்கரை, ஏா்வாடி ஆகிய பகுதிகளில் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட பயணிகள் நிழல் குடை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே.நவாஸ்கனி இந்த நிழல் குடைகளைத் திறந்துவைத்தாா்.
நிகழ்வில் கீழக்கரை நகா்மன்றத் தலைவா் செகனாஸ் ஆபிதா, துணைத் தலைவா் ஹமீது சுல்தான், திமுக நகரச் செயலாளா் பஷிா், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வேலுசாமி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிா்வாகிகள் அப்துல் ஜப்பாா், ஆஷிக் உசேன், முகம்மது தம்பி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement