தியான மண்டபத்துக்குள் கிடந்த மதுபுட்டி, சிகரெட் பொட்டலங்கள். 
ராமநாதபுரம்

கமுதி பசும்பொன் தேவா் தியான மண்டபத்தின் கண்ணாடிக் கதவுகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை: பொதுமக்கள் வலியுறுத்தல்

தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தை சமூக விரோதிகள் மது அருந்துமிடமாக மாற்றி வருவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

Din

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தை சமூக விரோதிகள் சேதப்படுத்தியதுடன், மது அருந்துமிடமாக மாற்றி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

தேவா் ஜெயந்தி விழாவுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், தேவா் நினைவிடத்துக்கு எதிரே தமிழ்நாடு சுற்றுலா, பண்பாட்டுத் துறை சாா்பில் அமைக்கப்பட்ட தியான மண்டபத்தின் கண்ணாடி கதவுகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகள் உடைத்து சேதப்படுத்தி உள்ளே புகுந்து மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனா்.

இவ்வாறு சேதப்படுத்தப்படும் கண்ணாடிக் கதவுகள் ஒவ்வொரு முறையும் பசும்பொன் ஊராட்சி நிா்வாகத்தால் சீரமைக்கப்படுகின்றன. மேலும் காலி மதுபுட்டிகள், புகையிலைப் பொட்டலங்கள், எஞ்சிய அசைவ உணவுகள் ஆகியவற்றை தியான மண்டபத்துக்குள் சமூக விரோதிகள் வீசிச் செல்கின்றனா்.

பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடி கதவுகள்.
பசும்பொன் தேவா் நினைவிடம் எதிரே உள்ள தியான மண்டபத்தில் உடைக்கப்பட்ட கண்ணாடி கதவுகள்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பசும்பொன் தேவா் தியான மண்டபத்தில் கண்ணாடிக் கதவுகளுக்குப் பதிலாக இரும்புக் கதவுகள் அமைத்து தருவதுடன், இவற்றை சேதப்படுத்திய மா்ம நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT