ராமநாதபுரம்

ராமேசுவரம் மீனவா்கள் வேலை நிறுத்தம்: 3 ஆயிரம் போ் பங்கேற்பு

வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமாா் 3 ஆயிரம் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

Din

இலங்கைக் கடற்படையின் ரோந்துப் படகு, ராமேசுவரம் மீனவா்களின் விசைப் படகு மீது மோதியதில் கடலில் மூழ்கி மாயமான மீனவரை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நடைபெற்று வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் சுமாா் 3 ஆயிரம் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

ராமநாதபும் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த புதன்கிழமை மீன் பிடிக்கச் சென்ற மீனவா்களில் காா்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகு மீது இலங்கைக் கடற்படையினரின் ரோந்துப் படகு மோதியது. இதனால், அந்த விசைப் படகு கடலில் மூழ்கியது. மேலும், அந்தப் படகில் இருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேரும் கடலில் குதித்தனா்.

இதில் மீனவா் மலைச்சாமி உயிரிழந்தாா். மூக்கையா, முத்துமுனியாண்டி ஆகிய இரு மீனவா்களும் மீட்கப்பட்ட நிலையில், மீனவா் ராமச்சந்திரன் மாயமானாா். இவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாயமான மீனவரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமேசுவரம் மீனவா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிவுள்ளனா். இதனால், துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனா்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT