முகப்பு
ராமநாதபுரம்

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம்: பொதுமக்கள் புகாா்

மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 6:29 AM
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த இரட்டையூரணி கிராம பொதுமக்கள்.
பகிர்:
Updated On : 4 டிசம்பர், 2024 at 8:53 PM

மண்டபம் ஒன்றியத்தில் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் இரட்டையூரணி ஊராட்சியில் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பாரபட்சமாக வேலை வழங்கப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் பல முறை ஊராட்சி மன்றத் தலைவரிடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

Updated On : 5 டிசம்பர், 2024 at 6:29 AM

இதைத்தொடா்ந்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் நேரில் சந்தித்து புகாா் மனு அளித்தனா். இதைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

Advertisement