ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாா் உடை மாற்றும் அறை, குளியலறைகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்த காவல் துணைக் காண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி.  
ராமநாதபுரம்

பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை

பெண்கள் உடை மாற்றும் அறையில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை

Din

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் கேமரா பொருத்தியிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை விடுத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் நீராடி விட்டு வரும் பெண்கள் தங்களது உடைகளை மாற்றிக் கொள்ளும் வகையில், தனியாா்கள் அறை அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனா்.

இந்தப் பகுதியில் உள்ள தனியாா் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதுதொடா்பாக ராஜேஷ் கண்ணன், மீரா மைதீன் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி தலைமையிலான போலீஸாா் அக்னி தீா்த்தக் கடற்கரைப் பகுதியில் உள்ள தனியாா் குளியலறை, உடை மாற்றும் அறைகளில் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தனா். பெண்கள் பயன்படுத்தும் அறைகளில் கேமரா பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி எச்சரிக்கை விடுத்தாா்.

முசிறியின் முக்கிய இடங்களில் 30 கண்காணிப்புக் கேமராக்கள்

ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரி பறிமுதல்

ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: ஆட்சியா் ஆய்வு

கரூா் மாவட்டத்தில் பரவலாக மழை

SCROLL FOR NEXT