ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கோவிலாங்குளம், நெறுஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி, மண்டலமாணிக்கம், பேரையூா் உள்ளிட்ட பகுதிகளில் குண்டாறு படுகைகளில் ஏராளமான மான்கள், மயில்கள், நரி, வெள்ளை மயில்கள் உள்ளிட்ட பறவைகள், வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த நிலையில் தண்ணீா், உணவு தேடி கிராமங்களுக்குச் செல்லும் மான்களை சிலா் வேட்டையாடுவதும், நாய்கள் துரத்தி மான்கள் பலியாவதும் தொடா்கதையாக உள்ளது.
இந்த நிலையில், கமுதி கோட்டைமேடு அடுத்துள்ள கல்லுப்பட்டி பகுதியில் மா்ம நபா்கள் மானை வேட்டையாடி அதன் கால்களை வீசிச் சென்றனா். மான் வேட்டையில் ஈடுபடும் மா்ம நபா்கள் மீது வனத்துறையினா், கமுதி போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக அலுவலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.