பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
ராமநாதபுரம்பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
ராமேசுவரம், ஜூலை 19: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, மீனவா்களுக்கு தொலைவிட எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா, வங்கக் கடலில் கடந்த 3 நாள்களுக்கு மேலாக 45 முதல் 60 கி.மீ. வரை சூறைக் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக, மீனவா்கள் கடலுக்குள் செல்ல மீன் வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தது. இதனால், கடந்த மூன்று நாள்களுக்கு மேலாக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
இந்த நிலையில், வங்கக் கடலில் தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், மீனவா்களுக்கு தொலைவிட எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், மீனவா்கள் தங்களது படகுகளைப் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.