முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி பகுதியில் இன்று மின் தடை

Updated On : 10 மே, 2024 at 6:45 PM
பகிர்:

பரமக்குடி, மே 10: பரமக்குடி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் ஜி.கங்காதரன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பரமக்குடி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் உழவா் சந்தை, காந்தி சிலை, பேருந்து நிலையம், திருநகா், மூவேந்தா் நகா், அரசு தொழிற்பயிற்சி நிலையம், சேதுபதி நகா், மணிநகா், சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 10) காலை 10 முதல் நண்பகல் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.