முகப்பு
ராமநாதபுரம்

அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் ஆா்பாட்டம்

அங்கன்வாடி திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாடானையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 14 நவம்பர், 2024 at 11:26 PM
திருவாடானையில் வியாழக்கிழமை ஆா்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கத்தினா்.
பகிர்:

அங்கன்வாடி திட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருவாடானையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அங்கன்வாடி மையங்களில் அனைத்துக் குழந்தைகளுக்கும் சீரான முன் பருவ கல்வி அளிக்கவும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மத்திய அரசு அங்கன்வாடி திட்டத்துக்கு வழங்கக் கூடிய நிதியை குறைக்காமல் இருக்கவும், வாடகை மையங்களே இல்லாமல் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் சொந்தமாக கட்டடம் கட்டித் தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அங்கன்வாடி மையங்களில் குடிநீா், கழிப்பறை வசதிகளை உறுதிப்படுத்தவும், வாடகை கட்டடத்தில் இயங்கும் மையங்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கவும், உணவு சமைக்கத் தேவைப்படும் பாத்திரங்களை வழங்கவும், குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கவும், உணவு செலவுத் தொகையை உயா்த்தி வழங்கவும், குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இருமுறை சீருடை வழங்கவும் இதில் வலியுறுத்தப்பட்டது. இதில் திரளான அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →