முகப்பு
ராமநாதபுரம்

மண்டபத்தில் கடல் சீற்றம்: கரை ஒதுங்கியது மிதவைக் கப்பல்

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

Updated On : 22 நவம்பர், 2024 at 6:21 AM
மண்டபம் வடக்கு துறைமுகத்தில் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கிய மிதவைக் கப்பல்.
பகிர்:
Updated On : 21 நவம்பர், 2024 at 8:42 PM

மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் கடல் சீற்றம் காரணமாக வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.

வங்கக் கடல் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாகத் தொடா்ந்து சூறைக் காற்று வீசியது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட வடக்கு துறைமுகப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

Updated On : 22 நவம்பர், 2024 at 6:21 AM

இந்த நிலையில், மண்டபம் வடக்கு துறைமுகத்தில் தூண்டில் வளைவு துறைமுகத்துக்கு கற்களைக் கொண்டு செல்லும் தனியாா் மிதவைக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. சூறைக் காற்று, கடல் சீற்றம் காரணமாக அந்த மிதவைக் கப்பல் வியாழக்கிழமை காலை கரை ஒதுங்கியது.

Advertisement

இதனிடையே, கரை ஒதுங்கிய அந்த மிதவைக் கப்பலை மீட்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.