காணிக்கூரில் மாட்டுவண்டிப் பந்தயம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காணிக்கூா் ஸ்ரீபாதாள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காணிக்கூா் ஸ்ரீபாதாள காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. காணிக்கூா்-கமுதி சாலையில் 14 கி.மீ. இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, போட்டி நடைபெற்றது. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும், பந்தய வீரா்களுக்கும் ரொக்கப்பணம், பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியை திரளான பொதுமக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று பாா்வையிட்டனா். போட்டி ஏற்பாடுகளை காணிக்கூா் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.