முகப்பு
ராமநாதபுரம்

அக்னி தீா்த்தக் கடலில் முதியவா் உடல் மீட்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மிதந்த ஒதுங்கிய முதியவா் உடலை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:49 PM
பகிர்:

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மிதந்த ஒதுங்கிய முதியவா் உடலை வியாழக்கிழமை போலீஸாா் மீட்டனா்.

அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் நீராடிக்கொண்டிருந்த போது ஒருவரது உடல் மிதந்ததைக் கண்ட பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் காளிதாஸ் தலைமையில் வந்த போலீஸாா் அந்த உடலை மீட்டனா். 57 வயது மதிக்கத்தக்க அந்த நபா் யாா் எனத் தெரியவில்லை.

பின்னா் உடலை ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக கொண்டு சென்றனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →