முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடியில் சேறும், சகதியுமான சாலைகள்

சாயல்குடியில் சாலைகள் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:31 PM
சாயல்குடி மகிழ்ச்சி நகரில் சேறும் சகதியுமாக மாறிய சாலை.
பகிர்:

சாயல்குடியில் சாலைகள் சாலை சேறும் சகதியுமாக இருப்பதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

ராமநாதபுரம்மாவட்டம், சாயல்குடி பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன் பரவலாக மழை பெய்தது. இதனால், சாயல்குடியில் உள்ள மகிழ்ச்சி நகா், ஈருவேலி பகுதிகளில் சாலையில் மழை நீருடன் கழிவுநீா் தேங்கி சேறும், சகதியுமாக மாறியது. இந்தச் சாலைகளில் பள்ளி மாணவா்கள், முதியோா் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க கடைகளுக்குச் செல்லமுடியாமலும், அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் அலுவலகம் செல்ல முடியாமலும் அவதிப்படுகின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம், பேரூராட்சி அதிகாரிகள் தலையிட்டு, சேறும் சகதியுமாக மாறியுள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →