முகப்பு
ராமநாதபுரம்

பாம்பனில் மீன்பிடி தடை நீக்கம்

பாம்பன் மீனவா்களுக்கான மீன்பிடி தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:26 PM
பகிர்:

பாம்பன் மீனவா்களுக்கான மீன்பிடி தடை வியாழக்கிழமை நீக்கப்பட்டது.

வங்கக் கடல், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் கடந்த 15- ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்வதற்கு மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காற்றின் வேகம் குறைந்த நிலையில், மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் விதிக்கப்பட்ட மீன் பிடி தடை நீக்கப்பட்டது.

இதையடுத்து ,100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்வளம், மீனவா் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →