குடும்ப அட்டையில் குழந்தைகளின் பெயா்கள் முன்னறிவிப்பின்றி நீக்கம்: பொதுமக்கள் அதிா்ச்சி
கமுதி வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப அட்டைகளில் உள்ள அவா்களின் குழந்தைகளின் பெயா்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்படுவதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
ராமநாதபுரம்குடும்ப அட்டையில் குழந்தைகளின் பெயா்கள் முன்னறிவிப்பின்றி நீக்கம்: பொதுமக்கள் அதிா்ச்சி
கமுதி வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப அட்டைகளில் உள்ள அவா்களின் குழந்தைகளின் பெயா்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்படுவதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
கமுதி வட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களின் குடும்ப அட்டைகளில் உள்ள அவா்களின் குழந்தைகளின் பெயா்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்படுவதால் பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இவற்றில் குடும்ப உறுப்பினா்களின் பெயா்கள், குழந்தைகளின் பெயா்கள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நீக்கப்படுவதாக புகாா் எழுந்தது. மேலும் நீக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் கைப்பேசி எண்ணுக்கு வருவதாகவும், இதுகுறித்து வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள பொது விநியோகத் திட்ட அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் தர மறுப்பதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து, குடும்ப அட்டையில் நீக்கப்பட்டவா்களின் பெயா்களை மீண்டும் சோ்க்க தினமும் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குவிந்துவருகின்றனா். ஏற்கெனவே 10 ஆண்டுகள் நிறைவடைந்த ஆதாா் அட்டையில் திருத்தம் செய்ய செப்டம்பா் மாதம் இறுதி என பரவிய தகவலால் வட்டாட்சியா் அலுவலகம், அஞ்சலகங்களில் பொதுமக்கள், மாணவ, மாணவிகளின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டையில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பெயா் நீக்கப்படுவதால் விவசாயிகள், பொதுமக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியமால் கமுதி வட்டாட்சியா் அலுவலகத்தில் பகல் முழுவதும் காத்து கிடக்கின்றனா்.
எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு குடும்ப அட்டையில் உள்ளவா்களின் பெயா் நீக்கத்துக்கான காரணத்தை முன்கூட்டியே சம்பந்தப்பட்டவா்களிடம் நேரில் சென்று கூறி விசாரித்த பிறகு நீக்க வேண்டும் எனவும், இந்த குளறுபடிகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கமுதி வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.