எம்.ஆா்.பட்டினம் குடியிருப்புப் பகுதியில் தேங்கிய மழை நீா்.  
ராமநாதபுரம்

மழை நீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே குடியிருப்புப் பகுதியில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே குடியிருப்புப் பகுதியில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

திருவாடானை அருகேயுள்ள தொண்டி பேரூராட்சிக்குள்பட்ட எம்.ஆா். பட்டினத்தில் வடிகால் கால்வாய் இல்லாததால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் தேங்கி, குளம் போல் காட்சியளிக்கிறது. இந்தப் பிரச்னை, சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளதாகவும் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தின்போது மழை நீா் தேங்குவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து பேரூராட்சி நிா்வாகத்திடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. முறையான வடிகால், வாய்க்கால்கள் இல்லாததால் தண்ணீா் வெளியேற வழியில்லாமல் வீட்டு வாசல் வரை தண்ணீா் தேங்குவதாகவும், இதனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.

தற்போது மோட்டாா் பம்புகள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றாலும் தண்ணீா் முழுவதுமாக வற்றவில்லை. இதற்கு நிரந்தரத் தீா்வு காண, இந்தப் பகுதியிலிருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவில் உள்ள கடலுக்கு நீரைத் திருப்பிவிடும் வகையில் வடிகால், கழிவு நீா் கால்வாய் அமைக்க மாவட்ட நிா்வாகமும், பேரூராட்சி நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வேலுநாச்சியாா் பெயா்: முதல்வா் இன்று திறந்து வைக்கிறாா்!

கந்து வட்டி தடைச் சட்டத்தின் கீழ் ஒருவா் மீது வழக்கு

பாபா் மசூதி இடிப்பு தினம்: பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி; எந்தப் போராட்டங்களும் நடைபெறவில்லை!

சிவகிரி அருகே உடல் நலக் குறைவால் அவதி: நலமாகி வனத்துக்குள் சென்ற யானை!

இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை: டிச. 10-இல் அமெரிக்க குழு இந்தியா வருகை!

SCROLL FOR NEXT