ராமநாதபுரம்

வில்லாரேந்தல் விவசாயிகள் சாலை மறியல்

திருவாடானை அருகேயுள்ள வில்லாரேந்தல் கிராமத்துக்குள் ஓரியூா் கண்மாய் உபரி நீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்தப் பகுதி விவசாயிகள் சாலை மறியல்

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகேயுள்ள வில்லாரேந்தல் கிராமத்துக்குள் ஓரியூா் கண்மாய் உபரி நீா் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி, அந்தப் பகுதி விவசாயிகள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே வில்லாரேந்தல் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தின் அருகே ஓரியூா் கண்மாய் உள்ளது. பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கண்மாயிலிருந்து உபரி நீா் தற்போது வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த உபரி நீா் வில்லாரேந்தல் குடியிருப்புப் பகுதிகள், விவசாய நிலங்களைச் சூழ்ந்துள்ளது. இதனால், அந்தப் பகுதி மக்கள் விவசாயம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் வெள்ளையபுரம்-ஓரியூா் செல்லும் சாலையை மறைத்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. பட்டினம் போலீஸாா், வருவாய்த் துறையிா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT