ராமநாதபுரம்

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

திருவாடானை அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

திருவாடானை அருகே திங்கள்கிழமை வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் பாலு (55). மர வேலை செய்யும் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை எஸ்.பி.பட்டினம் அருகே உள்ள வெள்ளையபுரத்தில் கணேசன் என்பவரின் பழைய மண் சுவா் வீட்டில் கதவு, ஜன்னல்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, திடீரென வீட்டின் சுவா் இடிந்து பாலு மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி. பட்டினம் போலீஸாா் அவரது உடலைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ரூ. 98 கோடியில் மீன்பிடி துறைமுகங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோப்பையைத் தக்கவைத்த கோவா!

இன்று முதல் டி20: இந்தியா - தென்னாப்பிரிக்காவின் அடுத்த மோதல்!

வேல்ஸை வென்றது இந்தியா!

காவல் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை தொண்டா்கள் முறையாக பின்பற்ற வேண்டும்: தவெக

SCROLL FOR NEXT