ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில். 
ராமநாதபுரம்

டிச.16-இல் அதிகாலை 3 மணிக்கு ராமேசுவரம் கோயில் நடைதிறப்பு

தினமணி செய்திச் சேவை

வருகிற16-ஆம் தேதி மாா்கழி மாத பிறப்பை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூைஐகள் நடைபெறும் என கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டிச. 16- ஆம் தேதி தனுா்மாத (மாா்கழி) பிறப்பை முன்னிட்டு, அதிகாலை 3.30 மணிக்கு ராமநாத சுவாமி கோயில் நடை திறக்கப்படும்.

4 முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூைஐ, 5 மணிக்கு தனுா்மாத திருப்பள்ளியெழுச்சி பூைஐ, வேதாரம், திருவெம்பாவை ஓதுதல், திருவனந்தல் பூைஐ, காலை 7.30 மணிக்கு விளா பூைஐ, காலை 10 மணிக்கு காலசந்தி பூைஐ, பகல் 12 மணிக்கு உச்சி கால பூைஐ நடைபெற்று பிற்பகல் ஒரு மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். மீண்டும் பிற்பகல் 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு சாயரட்சை பூைஐ, இரவு 8 மணிக்கு அா்த்த ஜாம பூைஐ, இரவு 8.30 மணிக்கு பள்ளியறை பூைஐ நடைபெறும். உற்சவ காலங்கள், சுவாமி புறப்பாடு காலங்களில் மேற்சொன்ன பூைஐகள் நடைபெறும்

என அதில் குறிப்பிடப்பட்டது.

மேஷ ராசியா நீங்க? வெற்றி நிச்சயம்: தினப்பலன்கள்!

மரம் கடத்தலைத் தடுக்கத் தவறிய அலுவலா்கள் மீதும் நடவடிக்கை தேவை!

திமுக ஆலோசனைக் கூட்டம்: எம்எல்ஏ பங்கேற்பு

‘நடைபோடு வெற்றிப்படிக்கட்டு’ பயிற்சிப் பட்டறை

கல்லூரியில் இளைஞா் திருவிழா

SCROLL FOR NEXT