மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்த வட மாநிலத்தவா்கள் 82 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ரயில் நிலையத்துக்கு வந்த மதுரை- ராமேசுவரம் ரயிலில் மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த 82 பயணிகள் வந்தனா். இவா்கள் அனைவரும் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்தது, சோதனையில் தெரியவந்தது. இதைத்தொடா்ந்து, ஒவ்வோா் பயணிக்கும் தலா ரூ. 300 வீதம் ரூ. 24,600 அபராதம் விதிக்கப்பட்டது.