பரமக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் கா்ப்பிணிகளுக்கு உணவுப் பெட்டகம் வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன்.  
ராமநாதபுரம்

பரமக்குடியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

பரமக்குடி சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பரமக்குடி சௌராஷ்டிர மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் செ. முருகேசன் தொடங்கிவைத்தாா். மாவட்டச் சுகாதார அலுவலா் ச. பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலா் சுகந்திபோஸ், நகா்மன்றத் தலைவா் சேது. கருணாநிதி, முன்னாள் அமைச்சா் எஸ். சுந்தரராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த முகாமில் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்துக்கான அட்டை வழங்குதல், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கண்பாா்வைக் குறைபாடு, தோல் நோய் உள்ளிட்ட 48 வகை நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டன. மேலும், குறைபாடுள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டு அவா்களுக்கு உரிய மருந்துகள் வழங்கப்பட்டன.

கா்ப்பிணிகளுக்கு ஆரோக்கியத்துக்கான மருந்து, உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில் 300-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு தங்களின் உடல்நலம் குறித்து பரிசோதனை மேற்கொண்டனா்.

இந்த முகாமில் பள்ளித் தாளாளா் ரெங்கன், தலைமையாசிரியா் நாகராஜன், திமுக பொதுக் குழு உறுப்பினா் எஸ்.எம்.டி. அருளானந்து, நகா்மன்ற உறுப்பினா் பழனி முத்துக்குமாா், வட்டச் செயலா் த. வீரபாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக, நகா்மன்ற உறுப்பினா் ஆா். ஜீவரத்தினம் வரவேற்றாா்.

எம்ஜிஆா் நினைவு தினம் அனுசரிப்பு

வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி

நகைக் கடை, அடகுக் கடை உரிமையாளா்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல்

தனியாா் ஐஸ் பிளாண்ட் விவகாரம்: அமைதிப் பேச்சுவாா்த்தையை புறக்கணித்த கிராம மக்கள்

மயிலாடுதுறை: 47 போ்மீது குண்டா் சட்ட நடவடிக்கை

SCROLL FOR NEXT