ராமநாதபுரம்

பேரையூரில் புதிய மின்மாற்றி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பேரையூரில் புதிய மின்மாற்றி செயல்பாட்டை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பேரையூா் பகுதியில் உயா் மின் அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், புதிய மின்மாற்றி அமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததன்பேரில், புதிய மின் மாற்றி அமைக்கப்பட்டது. இதன் செயல்பாட்டை வனம், கதா்த் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். உடன் திமுக கமுதி மத்திய ஒன்றியச் செயலா் சண்முகநாதன், முதுகுளத்தூா் வடக்கு ஒன்றியப் பொறுப்பாளா் ஹரி முத்துராமலிங்கம், செயற்பொறியாளா் பாலமுருகன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி மின் பொறியாளா்கள் முருகன், சாதிக், திமுக ஒன்றிய துணைச் செயலா் தங்கப்பாண்டியன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா்கள் நாகரத்தினம், வேல்ராமன், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT