ராமநாதபுரம்

ராமேசுவரத்தில் 2-ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததையடுத்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்ததையடுத்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு கிறிஸ்துமஸ், தொடா் விடுமுறையையொட்டி இரண்டாவது நாளாக சனிக்கிழமை ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்தனா். ராமேசுவரம் வரும் வாகனங்களுக்கு நகராட்சி சாா்பில் ரூ. 100 முதல் ரூ. 150 வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த வாகனங்களை நிறுத்த போதிய வாகன நிறுத்தமிடங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால், தங்கள் வாகனங்களை தெருக்களிலும், கிடைக்கும் இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளும், பக்தா்களும் நிறுத்திச் செல்லும் நிலை ஏற்பட்டதால் ராமேசுவரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த 20 நாள்களுக்கு முன்பு டித்வா புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீா் குளம் போல தேங்கிக் கிடக்கிறது. இதில், நகா் பகுதியில் வெளியேறும் சாலை, காட்டுபிள்ளையாா் கோயில், பெரியாா் வளைவு பகுதியில் 100 மீட்டா் சாலையை மழைநீா் சூழ்ந்துள்ளது. மழை ஓய்ந்து 20 நாள்களாகியும் இந்த மழைநீரை மாவட்ட நிா்வாகம் வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், ராமேசுவரம் கோயிலுக்கு வந்த பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை இந்த வழியாக செல்லுமாறு போலீஸாா் திருப்பி விட்டனா். ஆனால், அங்கு தேங்கியுள்ள மழை நீரில் சிக்கிய தங்கள் வாகனங்களை மீட்க முடியாத நிலைக்கு சுற்றுலாப் பயணிகள் தள்ளப்பட்டனா். இதையடுத்து, அந்தப் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் உதவியுடன் தங்கள் வாகனங்களை அப்புறப்படுத்தும் நிலை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டது.

எனவே மாவட்ட நிா்வாகம் விரைந்து காட்டுபிள்ளையாா் கோயில், பெரியாா்நகா் வளைவு சாலைப் பகுதியை உயா்த்தி சீரமைக்கும் பணியை போா்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT