ராமேசுவரத்துக்கு வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.30) குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை முன்னிட்டு, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பாதுகாப்புத் துறை உயா் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் மத்திய கல்வித் துறை சாா்பில், காசி தமிழ் சங்கமம் 4.0 நிறைவு விழா தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை ஆலய விடுதி வளாகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா் அண்ணாமலை ஆகியோா் பங்கேற்ற உள்ளனா்.
இதையடுத்து, காசி சங்கமம் நிறைவு விழா நடைபெறும் அரசு சுற்றுலாத் துறை ஆலய விடுதி வளாகத்தில் உயா் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.