ராமநாதபுரம்

உண்டியல் காணிக்கை பணம் திருட்டு: ஊழியரிடம் இணை ஆணையா் விசாரணை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, ரூ.ஒரு லட்சம் திருடிய ஊழியரிடம் இணை ஆணையா் விசாரணை

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின்போது, ரூ.ஒரு லட்சம் திருடிய ஊழியரிடம் இணை ஆணையா் புதன்கிழமை விசாரணை நடத்தினாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அம்பாள் சந்நிதி முன்புள்ள மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை இணை ஆணையா் க.செல்லத்துரை தலைமையில் நடைபெற்றது. இந்தப் பணியில் கோயில் ஊழியா்கள், ஆன்மிக பக்தா்கள் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கோயில் தூய்மைப் பணியாளா் மணிகண்டன் சுவாமி சந்நிதி உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தில் விபூதி அதிகளவில் இருந்ததால், அந்தப் பகுதியில் சுத்தம் செய்ய முடியாது எனக்கூறி, மற்றொரு பகுதியில் சுத்தம் செய்யும் போது ரூ.ஒரு லட்சத்தை எடுத்து மறைத்தாா்.

இந்தக் காட்சி அங்குள்ள சிசிடிவியில் பாதிவானது. இதையடுத்து, அவரைக் கோயில் பாதுகாப்பு அலுவலா் ஜெயராமன் பிடித்து அதிகாரியிடம் ஒப்படைத்தாா்.

இதைத் தொடா்ந்து, இணை ஆணையா் க.செல்லத்துரை, மணிகண்டனிடம் புதன்கிழமை விசாரணை நடத்தினாா். இந்தத் திருட்டு தொடா்பாக காவல் நிலையத்தில் புகாரளிக்க உள்ளதாக கோயில் அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், மணிகண்டன் மதுரையை சோ்ந்தவா் என்பதும், கோயில் அதிகாரி ஒருவருக்கு உறவினா் என்பது குறிப்பிடத்தக்கது.

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆட்டோவில் சுற்றுலா செல்லும் வெளிநாட்டினா் தஞ்சாவூருக்கு வருகை!

தனியாா் தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி

எழும்பூா் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில்: இன்றுமுதல் விருத்தாசலத்தில் நின்று செல்லும்

SCROLL FOR NEXT