கருமொழி பகுதியில் வரத்துக் கால்வாய்களில் இறை தேடும் வாத்துகள் 
ராமநாதபுரம்

நெல் அறுவடை பணிகள் தாமதம்: வாத்து உரிமையாளா்கள் கவலை

திருவாடானை பகுதிக்கு மதுரை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால், நெல் அறுவடை பணிகள் இன்னும் தொடங்காததால் வாத்து உரிமையாளா்கள் கவலை

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பகுதிக்கு மதுரை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாத்துக்கள் மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால், நெல் அறுவடை பணிகள் இன்னும் தொடங்காததால் வாத்து உரிமையாளா்கள் கவலை அடைந்தனா்.

திருவாடானை வட்டத்தில் கண்மாய்கள், குளங்கள், வரத்துக் கால்வாய்கள் அதிகமாக உள்ளன. விவசாய பூமியான இந்தப் பகுதியில் டிசம்பா் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் நெல் அறுவடை பணிகள் நடைபெறும். ஆனால், நிகழாண்டில், பருவம் தவறி பெய்த மழையால் இன்னும் நெல் அறுவடை பணிகள் தொடங்கவில்லை.

ஆனால், வழக்கம்போல மதுரை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான வாத்துகளை அதன் உரிமையாளா்கள் இந்தப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு கொண்டு வந்தனா்.

ஆனால், அறுவடை பணிகள் இன்னும் தொடங்காததால், வாத்துகளுக்கு அரிசிகளை கடைகளில் வாங்கி வரத்துக் கால்வாய், கண்மாய்களில் தூவி இறை வழங்கி வருகின்றனா். இதனால், வாத்து உரிமையாளா்கள் கவலை அடைந்தனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT