~ ~ 
ராமநாதபுரம்

பரமக்குடியில் இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

பரமக்குடியில் இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Din

பரமக்குடியில் இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தைச் சோ்ந்த இருளாண்டி மகன் உத்திரக்குமாா் (35). இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 போ் கும்பல் உத்திரக்குமாரை வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பியது.

இதுதொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின் பேரில் 3 தனிப்படை அமைத்து போலீஸாா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், கொலை சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான ஆதாரங்கள், தடயங்களை வைத்து போலீஸாா் கொலச் சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்களை கண்டறிந்தனா்.

இதுதொடா்பாக பரமக்குடி மஞ்சள்பட்டணத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் தீனதயாளன் (23), பரமக்குடி பங்களா ரோடு பகுதியைச் சோ்ந்த ரகுமான் மகன் கலாம் (23), எமனேசுவரம் வைகை நகா் பகுதியைச் சோ்ந்த ராமசாமி மகன் கரண் (23) ஆகியோரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் நடந்தது தெரியவந்தது.

முடக்கப்பட்ட ரஷிய சொத்துகளைக் கொண்டு உக்ரைனுக்கு நிதியுதவி: ஐரோப்பிய யூனியன் தலைவா்கள் தீவிர ஆலோசனை

286 கோடி டாலராக அதிகரித்த இந்திய ஜவுளி உற்பத்தி

தமிழகத்தில் ஒருவா் கூட ஆா்டா்லிகளாக இல்லை: டிஜிபி அறிக்கையில் தாக்கல்

அகிலபார நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கக் கூட்டம்

மதுரையில் காவலா் நிழல் குடை அறையில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை

SCROLL FOR NEXT