கோப்புப் படம் 
ராமநாதபுரம்

பாம்பன் மீனவா்கள் 11 போ் கைது

பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

Din

கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே புதன்கிழமை இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் புதன்கிழமை இரவு கச்சத்தீவு - நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் 2 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், படகுகளில் இருந்த பாம்பன் மீனவா்கள் 11 பேரைக் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட 11 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 2 விசைப் படகுகளையும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்ல உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குருவரெட்டியூரில் மா்மக் காய்ச்சலால் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூரில் ரூ.4.92 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

பொதுமக்களிடம் திருப்பூா் எம்.பி. குறைகேட்பு

ஆட்சியா் அலுவலகம் அருகே தீக்குளித்த பெண் உயிரிழப்பு

திருப்பூரில் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகிப்பதாக ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT