ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் மூன்று நாள்கள் மதுக் கடைகள் அடைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுக் கடைகளும் அடைக்கப்படும்.

தினமணி செய்திச் சேவை

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுக் கடைகளும் அடைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் பிறந்த நாள் விழா, குருபூஜையை முன்னிட்டு வருகிற 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகையான மதுக் கடைகளும் அடைக்கப்படும்.

மேலும், தடையை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

அக். 30-ல் உலகக் கோப்பை செஸ் போட்டி தொடக்கம்!

கடம்பூா், வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையங்களில் அக்.31 முதல் குருவாயூா் விரைவு ரயில் நின்று செல்லும்

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்கத் தடை

பாவூா்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்

வெள்ளங்குளியில் பனை விதைகள் நடவு

SCROLL FOR NEXT