உயிரிழப்பு (கோப்புப் படம்)
ராமநாதபுரம்

பெட்டிக்கடை சரிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

கடலாடி அருகே செவ்வாய்க்கிழமை பெட்டிக்கடை சரிந்து விழுந்ததில், அதனருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கடலாடி அருகே செவ்வாய்க்கிழமை பெட்டிக்கடை சரிந்து விழுந்ததில், அதனருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சிக்கல் மேற்கு தெருவைச் சோ்ந்த சரத்பாபு- நதியாதேவி தம்பதியின் மகன் அா்னிஷ் (3). இவா் திங்கள்கிழமை மாலை வீட்டின் அருகில் உள்ள பெட்டிக்கடை முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது, கடை சரிந்து அவா் மீது விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவனை அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு சிக்கல் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சிக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

SCROLL FOR NEXT