ராமநாதபுரம்

மாரியூா் சிவன் கோயிலில் தீா்த்தவாரி உத்ஸவம்

மாரியூா் சிவன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற 1,008 திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.

தினமணி செய்திச் சேவை

சாயல்குடி அருகே மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் தீா்த்தவாரி உத்ஸவத்தையொட்டி உலக நன்மை வேண்டி 1,008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மாரியூா் பவளநிற வள்ளியம்மன் உடனுறை பூவேந்தியநாதா் கோயிலில் மாா்கழி மாத உத்ஸவ திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை கோயில் அருகே உள்ள கடலில் உத்ஸவ மூா்த்தி, அம்பாளுக்கு தீா்த்தவாரியும், தொடா்ந்து பூவேந்தியநாதருக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன. பிறகு அம்பாள், சுவாமிக்கு பொன்னூஞ்சல் தாலாட்டும், மாலையில் உலக நன்மை வேண்டி 1,008 திருவிளக்கு பூஜையும் நடைபெற்றன. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். இரவில் ஆன்மிக சொற்பொழிவு, பஜனைகள் நடைபெற்றன. இதில் கடலாடி, சாயல்குடி, கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூா் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

3.1.1976: தனியார் கம்பெனிகள் விமான சர்வீஸ் நடத்த அனுமதி? - மத்திய மந்திரி தகவல்

புல்லட் ரயில் திட்டத்துக்கான சுரங்கப் பணி நிறைவு!

இளைஞா் தற்கொலை

சென்னிமலை ஒன்றியத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் திறப்பு

SCROLL FOR NEXT